Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

காஞ்சனா-3  பட நடிகைக்கு விளம்பர நடிகர் பாலியல் தொல்லை!

indiraprojects-large indiraprojects-mobile

சமீபத்தில் வெளியான ராகவா லாரன்சின் காஞ்சனா -3 படத்தில் நடித்தவர் ரஷ்யாவை சேர்ந்த ஜானே கட்டாரியா இவர் மாடலிங் , டான்சர் , புகைப்பட கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் . சினிமா வாய்ப்புக்காக நட்சத்திர ஓட்டலில் தங்கி , படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார் . இந்த நிலையில் இவருக்கு விளம்பர பட நடிகரான ரூபேஷ்குமார் சமூகவலைத்தளம் மூலம் நண்பராக அறிமுகமாகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார் . பின்பு விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி வித விதமாக போட்டோ எடுத்துள்ளான் . 

 

arrested



இதனை தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தர வேண்டும் என்றால் தன்னுடன் உறவு கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்திள்ளான் , இதற்கு ஜானே கட்டாரியா மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ரூபேஷ்குமார் ஏற்கனவே எடுத்த போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்துள்ளான். அதை இணையத்தளத்தில் வெளியிட போவதாகவும் மிரட்டி உள்ளான் அதிர்ச்சியடைந்த    ஜானே கட்டாரியா இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் . இந்த புகாரை விசாரித்து ரூபேஷ்குமாரை புழல் சிறையில் அடைத்துள்ளனர் . 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...