Advertisment

பெரியார் சிலை விவகாரம் - ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனுத்தாக்கல்!

Kanal Kannan filed a petition in Egmore court seeking bail!

Advertisment

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பிணைக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீதிபதி கிரிஜா ராணி முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்த போது, கனல் கண்ணனுக்கு பிணை வழங்க ஆட்சேபனை தெரிவித்து, புகார்தாரரான குமரன் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இரு மனுக்களையும் நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கனல் கண்ணனின் முன் பிணை மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று அவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

Egmore police kanalkannan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe