
சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி கூட்டங்களில் பங்கேற்று வரும் நிலையில், கடந்த 30ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கக்கூடிய பெரியார் சிலை குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது. திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியோர் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீதுகலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் வைத்து கனல் கண்ணன் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow Us