Advertisment

'கனகராஜ் டூ கனகராஜ்'-கொடநாடு சம்பவத்தில் இபிஎஸ்-ன் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆஜர்

kodanadu

நீண்ட ஆண்டுகளாவே விசாரணையில் இருந்து வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் முதன்மைப்பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீசார்இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisment

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின்மறைவிற்கு பிறகுகடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கையிலெடுத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

kodanadu

சிபிசிஐடி, ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் 250 க்கும் மேற்பட்டோரிடம் இந்த வழக்கில் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் என்பவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்

அதன்படி இன்று வீரபெருமாள் ஆஜராகியுள்ளார். அப்போதைய பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், இந்த சம்பவத்தில் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜ்க்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவருடைய செல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் ஆஜராகியுள்ள வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

CBCID admk kodanadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe