Advertisment

காமராஜரின் நண்பர் தலைப்புச் செய்தி பெரியசாமி காலமானார்!

Kamaraj's friend Periyasamy passes away!

Advertisment

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான தலைப்புச் செய்தி பெரியசாமி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நேரத்தில் சுதந்திர போராட்டங்களில் நிலை, தலைவர்களின் அறிவிப்புகள் குறித்த செய்திகள் தினம் தினம் நாளிதழ்களில் வெளியாகும். படிக்காத பாமரர்கள் மத்தியில் நாட்டில் நடப்பவைகள் என்னவென்றும், சுதந்திரப் போராட்டத்தின் நிலைகள் குறித்தும் தெரிந்து கொள்ளும் வகையில் பெரியசாமி நாளிதழ்களில் வெளியாகும் தலைப்புச் செய்திகளை உரக்கப் படித்துக் காட்டுவார். இதனாலேயே இவர் தலைப்புச் செய்தி பெரியசாமி என்ற அடைமொழியுடன் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.

காங்கிரஸில் தீவிரமாக இயங்கி வந்த தலைப்புச் செய்தி பெரியசாமிக்கும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜருக்கும் இடையே மிக நெருக்கமான நட்பு இருந்தது. குடும்பத்தில் வறுமை நிலவிய போதும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை எனக்கு வேண்டாம் என கூறியவர் தலைப்புச் செய்தி பெரியசாமி. இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக விளாத்திகுளம் அருகே உள்ள கொளத்தூரில் அவரது மகள் வீட்டில் வசித்துவந்த வசித்து வந்த பெரியசாமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருடைய 101 ஆவது வயதில் இயற்கை எய்தினார்

Thoothukudi kamarajar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe