Advertisment

காமராஜர் பிறந்த நாள் விழா; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை நகராட்சி இந்து நடுநிலைப்பள்ளியில் ஜீலை 15 ந்தேதி காமராஜர் பிறந்தநாள் விழாவை உள்ளூர் திமுக பிரமுகர்களை வைத்து மரம் நடும் விழாவாக நடத்தியுள்ளார் தலைமை ஆசிரியை பரிமளா.

Advertisment

k

இதுப்பற்றி ஆளும் அதிமுகவினர் கோபமாகி, கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கூறினர். அந்த புகாரின் அடிப்படையில், நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் விசாரணை நடத்தினார். பின்னர் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதால், கல்வித்துறை சார்பில் வாணியம்பாடி டிஎஸ்பி முரளியிடம் புகார் கொடுத்துள்ளார்.

k

Advertisment

இந்த புகாரை தொடர்ந்து, முதல் கட்டமாக துறை ரீதியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவின் பேரில் தலைமை ஆசிரியை பரிமளாவை தற்காலிக பணி நீக்கம் செய்து வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

daily rasipalan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe