Advertisment

காமராஜர் பிறந்தநாள்: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடிய அரசுப் பள்ளி..! 

Kamaraj's birthday; Government school celebrates Education Development Day ..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கல்விக் கண் திறந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே. இளங்கோதை, காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் காமராஜர் செய்த சாதனைகளை நினைவுகூர்ந்துஆசிரியர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜசேகரன், முதுகலை ஆசிரியர்கள் பாலகுரு, முத்தையன், பட்டதாரி ஆசிரியர்கள் பாத்திமா பேகம், கலைச்செல்வி, தேன்மொழி, வாசுதேவன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

kamarajar kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe