Kamaraj University  Professor Shanmuga raja arrested!

Advertisment

மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசிய புகாரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா. இவர் வரலாற்றுத்துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரிடம் அவரது சமூகம் குறித்து தரக்குறைவாகவும்ஒருமையிலும் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த மாணவி, மதுரை நாகமலை காவல்நிலையத்தில் பேராசிரியர் சண்முகராஜா மீது புகார் அளித்தார்.

அந்தப் புகாரை ஏற்று நாகமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பேராசிரியர் சண்முகராஜா தரக்குறைவாகவும்ஒருமையிலும் பேசியது உண்மையெனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நாகமலை காவல்துறையினர் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Advertisment

கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக இவர் மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசியதாகப் புகார் எழுந்து அப்போது மாணவர்களின் பெற்றோர் பல்கலைக்கழகத்திற்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.