
அண்மையில் 'ரஜினிகாந்த் பவுண்டேஷன்' என்ற பெயரில் மோசடி நடைபெற்றதாகக்காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ்' நிறுவன பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோசடி, தகவல்தொழில் நுட்பத்தைத்தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடிகர் கமலஹாசன், 'ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' என்ற பெயரில் கடந்த 43 ஆண்டுகளாகப் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது நடிகர் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனை வைத்துப் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்து வருவதாகமணிகண்டன் என்ற நபர் மீதுபுகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில்இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)