Advertisment

கமல் பிறந்த நாள் கொண்டாட்டம்...

Kamal's birthday celebration ...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 66 -ஆவது பிறந்த நாள், இன்று அக்கட்சியினரால் தமிழகம் முழுக்கக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது கட்சியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கியுள்ளார்கள்.

Advertisment

ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் துரைசேவகன் கூறும் போது,

Advertisment

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி ஈரோடு மேற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் தொடர்ந்து 6 நாட்களுக்குத் துப்புரவுத்தொழிலாளர்கள், வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள் என 666 பேருக்கு, பட்டாசு, இனிப்பு, வேட்டி -சேலை வழங்கி கொண்டாடப்படவுள்ளது. சூரம்பட்டி பகுதி பெரியசேமூர் நகரம், காசிபாளையம் பகுதி, சூரியம்பாளையம் பகுதி என எல்லா இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது என்றார்.

birthday Kamalhasaan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe