Advertisment

கமல் கோபத்திற்கு ஆளான ரம்யா! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்!

ramya

விஜய் டிவியில் கடந்த 5 வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ்-2. ஒவ்வொரு வாரமும் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டும் வரும் நிலையில், நாளை வரும் ஒளிபரப்பில் என்.எஸ்.கே. பேத்தியும், பாடகியுமான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

Advertisment

kamal

வெளியேற்றப்பட்ட ரம்யா கமல்ஹாசனிடம் அடுக்கடுக்கான புகார் கூறினார். பொன்னம்பலமும், டேனியும் ரொம்ப கீழ்த்தரமாக பேசிக்கொள்கிறார்கள். இதை பிக்பாஸ் நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. நடிகர் செண்ட்ராயன் உண்மைத்தன்மையாக நடந்துகொள்வதில்லை. அவர் ரொம்ப நடிக்கிறார். அதனால் இந்த வார நடிகர் பட்டம் செண்ட்ராயனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மும்தாஜ் ரொம்ப ஹைஜீனிக் என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் சுத்தமாக இல்லை. ரொம்ப மோசமாக நடந்துகொள்கிறார் என்று புகாரை அடிக்கிக்கொண்டே போனார். சடாரென்று கோபப்பட்ட கமல், கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரைக்கும் ஹைஜீனிக் என்பது நமது பார்வையில்தான் உள்ளது. நிறைய பைவ் ஸ்டார் ஓட்டல்களில் கூட ஹைஜீனிக்கை பார்க்க முடியாது. அதனால் இதையெல்லாம் ஒரு புகாராக எடுத்துக்கொண்டு வராதீங்க என்று கண்டித்தார்.

Advertisment
Biggboss kamalhasan ramya nsk vijay tv
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe