kamalhasan tweet

Advertisment

சென்னையில்ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கியது.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.அதேபோல் காமராஜர் சாலை, வேப்பேரி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் இது தொடர்பாக டீவிட்வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஒரு மணி நேர மழை தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வரட்டுமா என வடகிழக்கு பருவமழை மிரட்டுகிறது. கருணை மழையைசேகரிக்க நீர்நிலைகள் தயார் செய்யப்பட வில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடம் எதுவுமில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும்மழை நீர் புகுவதுகுறையவில்லை.கரையோர மாவட்டங்களில் கடைகண்ணாவது வையுங்கள்எனதெரிவித்துள்ளார்.