தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக கல்லூரி விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதில் இருந்து தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதா என்றவிவாதங்களும், அதுகுறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளையும்தெரிவித்து வருகின்றனர்

Advertisment

kamal

நேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது உண்மைதான். தமிழகத்தில் உருவாகியுள்ள அந்த அரசியல் வெற்றிடத்தை ரஜினிதான்நிரப்புவார் என தெரிவித்திருந்தார். அதேபோல் அதிமுக, திமுகவினர் தங்கள் தலைமைகளை சுட்டிக்காட்டிஅரசியல் வெற்றிடம் ஒன்றும் இல்லை என தொடர்ச்சியாகதெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அவரவர் விருப்பங்களை அவரவர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து ஒன்றை சொல்லிக்கொண்டிருப்பதால்அது உண்மையாக வேண்டிய அவசியம் இல்லை. நல்ல தலைமைக்கு ஆள் இல்லை என்பதுதானே தவிர நல்ல தலைவர்கள் இருந்தார்கள் என்பது பொய் அல்ல.ஆனால் இன்று இல்லை என்பதைதான் நாங்கள் சொல்கிறோம் என்றார்.