குடிநீர் பிரச்சினைக்கு மழைநீர் சேகரிப்பு ஒன்றுதான் தீர்வு எனவும், அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் ஒவ்வொருவரும் மழைநீரை சேகரிக்க வேண்டும் எனவும் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

kamalhasan interview

தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் சங்கத் நிர்வாகிகளுக்கான தேர்தல் திநகரில் உள்ள நடன கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடன இயக்குனர் ஷோபி பால்ராஜ் தலைமையிலான அணியினரும் நடன இயக்குனர் தினேஷ் குமார் அணியினரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம்கட்சி தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisment

நடிகர் சங்கத்தின் வாக்கு எண்ணிக்கை நியாயமான முறையில் சட்டபூர்வமாக நடைபெற வேண்டும்.மழை நீரை சேமிப்பது ஒன்றுதான் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரே வழி என எனக்கு தோன்றுகிறது இதற்குஅரசைஎதிர்பார்க்காமல் ஒவ்வொருவரும் தனி மனிதரும்பங்களிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.