Advertisment

நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாமா..? கமல்ஹாசன் பதில்!

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க தேர்தலில் கலந்துகொண்டு வாக்களித்த நடிகரும், மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,

Advertisment

கிட்டத்தட்ட போஸ்டல்ஒட்டுக்களோடுசேர்த்து 3000 ஓட்டுக்கள். அதற்கு இவ்வளவு பெரிய மீடியா கவரேஜ்இருப்பது சந்தோஷமாக இருக்கிறது, பதற்றமாகவும் இருக்கிறது. இங்கு எல்லோரும் ஒரு குடும்பம். இதில் ஒருவருக்கு ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்தை அளிக்கிறது. அது போஸ்டல் டிபார்ட்மெண்டின்பிழை என்றும் சொல்லலாம் இல்லை தாமதம் என்று சொல்லலாம்.

Advertisment

kamalhasan

அடுத்தமுறை அது நிகழாமல் பார்க்க வேண்டும். நண்பர் ரஜினியின் ஓட்டு எல்லா உறுப்பினர்களின் நோட்டை போல முக்கியமான ஓட்டு அது விழுந்திருக்கவேண்டும். அவரும் ஆர்வமாக இருந்தார் ஆனால் அது நடக்கவில்லை என்பது வருத்தத்தைத் தருகிறது. அடுத்தமுறை இது போன்ற பிழைகள் வராமல் தவிர்க்க வேண்டும்.

வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள் மறுவாக்குப்பதிவு என்பது பற்றி நீதிபதிகளிடம் கேட்கவேண்டும் ஏதும் செல்லக்கூடாது.அவர்கள் தான் சொல்ல வேண்டும் நாம் அதில் கமென்ட் அடிக்கக் கூடாது. தென்னிந்திய தமிழ்ச் சங்கத்தின் பெயரை தமிழ் தாய் சங்கம் என மாற்ற வேண்டும் என்பது பற்றிய கேள்விக்கு, எனக்கு அப்படியே பழகி விட்டது. என்னை திடீரென்று என் பெயரை மாற்றச் சொன்னால் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால் மாற்றித்தான் ஆக வேண்டுமென்றால் பெரும்பான்மை என்ன சொல்கிறதோ அதை பார்த்துவிட்டு தான் அதைப் பற்றி முடிவெடுக்கப்படும். நடிகர் சங்கத்தேர்தலில்அரசியல் கட்சிகள் தலையீடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை இருந்தால் அப்படி இருக்கக் கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள்என்றார்.

kamalhaasan tamilcinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe