
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், சூழ்ச்சியைத் தவிர்க்கவே கோவை தெற்கில் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ''மத நல்லிணக்கத்திற்கு எதிராக நடக்கக்கூடிய சூழ்ச்சியைத் தவிர்க்கவே இந்த தொகுதியைத் தேர்ந்தெடுத்தேன். அரசியல்வாதியாக, நான் பிறந்த ஊர் கோவை தெற்கு தான். கோவை தெற்கின் முகமாக மாறி வருகிறேன். அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போன்று தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஊதியம் பெற வேண்டும். கல்வியை இலவசமாகத் தருகிறோமோ இல்லையோ தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும்'' என்றார்.