Advertisment

’சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்...’’ - கமல், சீமான் மீது இயக்குநர் சேரன் தாக்கு

தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

Advertisment

ச்

இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘‘மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மநீம, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களை கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள்..

Advertisment

தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள்தானே..

எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க.. யாரும் தீர்வை நோக்கி நகரவேயில்லை... ப்ரச்னைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவு படுத்தவில்லை.. ஆனால் வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும்.. யாரை நம்பி மாற்றம் தேடுவது... சாதாரண வாக்காளனாய் எனக்கு தோன்றியது..’’என்று பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seeman cheran kamalhasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe