Advertisment

கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு! தம்பிக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு !  கமல்ஹாசன்

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். புதிய கல்விக்கொள்கை வரைவில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் அச்சம் தரக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன என்று கூறினார்.

Advertisment

புதிய கல்விக்கொள்கைக் குறித்த சூர்யாவின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.

Advertisment

k

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே, கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு.

புதிய கல்விக்கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கின்ற ‘’வரைவு அறிக்கை’’மீது கருத்து சொன்னதற்காக, சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு.’’என்று பதிவிட்டுள்ளார்.

kamalhasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe