k

கேரளாவில் எர்ணாக்குளம் மாவட்டத்தில் டூவண்டி 20 கிழக்கம்பாலம் எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை - எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஏழைகளிடம் வீடுகளை ஒப்படைத்தார்.

Advertisment

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் தற்போது ’இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன். நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயல்படும். எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் செயல்படும். மக்கள் நல திட்டங்களுக்கும் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்.

Advertisment

இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும்’’என்று தெரிவித்துள்ளார்.