ADVERTISEMENT

துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமிழக வம்சாவளி கமலா ஹாரிஸ்க்கு  ஓபிஎஸ் வாழ்த்து 

12:57 PM Aug 12, 2020 | kalaimohan

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்பது முன்னரே உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிட உள்ளார். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குக் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தை பூர்விகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, ஜோ பிடெனுக்கு எதிராக போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து தற்போது துணை அதிபர் பதவிக்கு தற்போது ஜோ பிடெனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT