kamal wishes - Tamilnadu CM birthday

Advertisment

மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நூதனமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கரோனா தாக்கத்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படவில்லை. இருப்பினும் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்" என தெரிவித்துள்ளார்.