Advertisment

“பட்ஜெட் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறது!” – கமல்ஹாசன் கருத்து!

b

Advertisment

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். சுமார் 1 மணிநேரம் 50 நிமிடங்கள் இந்தப் பட்ஜெட் உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக இந்த பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனம் செய்துவருகிறார்கள்.

இதுதொடர்பாக நடிகர் கமல் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe