மக்கள் நீதி மய்யத்தோடு செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதுப்பற்றி மார்ச் 19ந்தேதி அதிகாரப்பூர்வமாக நடிகர் கமலும், செ.கு.தமிழரசனும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து கூட்டணி பற்றி அறிவித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kl2.jpg)
இந்திய குடியரசு கட்சிக்கு பாராளூமன்ற தொகுதி ஒன்றும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் 3 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் ஒதுக்கியுள்ளது. எந்தெந்த தொகுதி என்பது மார்ச் 20ந்தேதி அறிவிக்கப்பட்டவுடன், அந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் யார், யார் என்பதை இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன் அறிவிப்பார் எனக்கூறப்படுகிறது.
இந்திய குடியரசு கட்சியின் சார்பில் செ.கு.தமிழரசன், திருவள்ளுவர் தொகுதி அல்லது சிதம்பரம் தொகுதி இரண்டில் ஒன்றில் போட்டியிடுவார் எனக்கூறப்படுகிறது. அதேப்போல் 3 சட்டமன்ற தொகுதிகளில் குடியாத்தம் தனி தொகுதி இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
​
அந்த தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் தலித்குமார் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனக்கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)