kamal 33

Advertisment

kamal 81

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று காலை துவங்கினார் கமல்ஹாசன். பின்னர் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்தித்து பேச சென்றார் நடிகர் கமல்ஹாசன்​. அங்கு அவரை அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.

அப்போது அங்கு பேசிய கமல், மீனவர்களின் சுகதுக்கங்களை பத்திரிகைகள் மூலம் அறிய விரும்புவதை விட உங்களிடம் கேட்டறிய வந்துள்ளேன்.தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடி தொழிலும் ஒன்று. ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிட்டு அதனை நிறைவேற்றவில்லை. மீனவர்களுக்கு செவி சாய்க்க வேண்டியது எங்களது கடமை. இவ்வாறு கூறினார். மேலும் இன்னொரு நாள் வந்து மீனவர்களுடன் கலந்துரையாடுவதாக கூறிவிட்டு புறப்பட்டார்.