கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமானது. இதில் போட்டியாளர்களாக சேரன், ஷெரின், ஃபாத்திமா பாபு, கவின், அபிராமி, சரவணன், லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா ஆகிய 15 பேரும் களமிறங்கியுள்ளனர். கடந்த இரண்டு சீசனையும் போலவே இந்த சீசனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீஸனில் பிக் பாஸ் வீடு மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள் என 'பிக் பாஸ்' வீடே ஒரு கலைக்கூடம் மாதிரி காட்சியளிக்கிறது.

Advertisment

kamal

அதில், 'விருமாண்டி' கமலின் பாதி முகமும் இடம்பெற்றுள்ளது. இதேபோல், ரஜினியின் 'பேட்ட' ஓவியமும் 'பிக் பாஸ்' வீட்டில் இடம்பெற்றிருக்கிறது.பத்திரிகையாளர்கள் தங்கியபோது இடம்பெற்றிருந்த 'பேட்ட' ரஜினி ஓவியம், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின்போது இல்லை. எனவே, பத்திரிகையாளர்கள் தங்கிச்சென்ற பின்னர் ரஜினி ஓவியம் அகற்றப்பட்டிருப்பதாக அங்கு சென்றுவந்த பத்திரிகையாளர்கள் கூறிவருகின்றனர்.மேலும் பிக் பாஸ் வீட்டில் ப்ரோமோ வீடியோவில் சேரன், பாத்திமா பாபு இடையே விவாதம் ஏற்படுவது போல் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது.