ADVERTISEMENT

ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் கமல் மனு!

06:37 PM May 15, 2019 | kalaimohan


கடந்த இரு தினங்களுக்கு முன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று அவரக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில் கமல் மீது அவரக்குறிச்சியில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தோப்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தான் கூறிய கருத்து சரித்திர உண்மை என கமல் கூறியிருந்தார்.

இந்த சர்ச்சை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவை அவரச வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது. ஆனால் மதுரை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT