Advertisment

கிராமசபை கூட்டத்தில் கமல் பங்கேற்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமசபை கூட்டத்தில் இன்றுபங்கேற்று பேசினார்.அப்போது கூறுகையில்,

Advertisment

உறவுக்கு அரணாகஎன் கடமை.என்ன வேண்டும் என்பதை கேட்டு அறிந்தோம். இயன்றதை நாங்கள் செய்ய போகின்றோம். ஒரு அரசு செய்ய முடிந்ததை ஒரு தனி நபர் செய்ய முடியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்ய போகிறோம். அதனால் தான் நாங்கள் 12,500 கிராமத்தையும்தத்து எடுக்கவில்லை. எங்களால் வெற்றி பெற முடியும் என்று நினைத்து 8 கிராமத்தை மட்டும்தத்துதெடுத்து உள்ளோம். உங்கள் ஆசியும், உதவியும் இருந்தால் 12,500 கிராமத்தையும் தத்து எடுக்கும் நாளும் ஒருநாள்வரும்.

kamal haasan

பிறகு அவர் மக்கள் நீதி மய்யம் அறிக்கையை வெளியிட்டார்,

பள்ளிக்கூடங்களில் கழிப்பறை மற்றும் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். பிறகு கிராம பசுமைக்கு மரக்கன்றுகள் நடப்படும். குறுகிய காலத்தில் திறமையை வளர்த்துக் கொள்ள தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்படும். நீர் சேகரிப்பதற்கு அணைகள், மடைகள் கட்டப்படும். குளத்தின் சுவர்கள் கல் பதித்து இன்னும் நீர் தேங்குவதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்போகிறோம். ஏரிகள் உலர் அமைப்பு செய்யப்படும். இங்கு நாங்கள் இதை செய்கிறோம் ஓட்டு போடுங்கள் என்பதற்காக அல்ல செய்யப்போகின்றோம்.

Advertisment

இன்னும் நிறைய கிராமங்களிலும் செய்ய உள்ளோம். யாரோ வருகிறார்கள் அவர்கள் செய்வார்கள் என்று நினைக்காதீர்கள், இதை நாம் தான் செய்ய வேண்டும். நாம் எல்லோரும் கிராமத்தார்கள் அது எல்லோருக்கும் பொருந்தும் எனக்கும் கூட தான். இங்கு வாழும்நரிக்குறவர்கள் வாழ்வு மேம்பட மக்கள் நீதி மய்யம் உதவும் எனவும் கூறினார்.

villages help center Makkal needhi maiam kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe