Advertisment

மோடி பதவியேற்பு விழாவிற்கு செல்கிறாரா கமல்...?

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

Advertisment

இதைத்தொடர்ந்து, வருகிற 30-ந் தேதி(வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்க இருப்பதாகவும், அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

kamal

30-ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.கஸ்டாலினுக்கு பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.அதற்கு முன்னரே ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோருக்கு பாஜக அழைப்புவிடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது. கொடுக்கப்பட்ட அழைப்புக்கு குறித்த கேள்விக்கு விழாவில் பங்கேற்க உள்ளதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியை பரப்பியது யார்? எனபதிவிட்டுள்ளார்.

இந்த தகவலை அடுத்து மக்கள் நீதி மய்யம் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்துதொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முறையான அழைப்பு கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதாஇல்லையா என்பது பற்றி இன்று கமல் முடிவெடுப்பார் என தகவல்கள் வந்துள்ளது.

Makkal needhi maiam kamal modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe