Skip to main content

கமல்நாத் சர்ச்சை கருத்து -ஜோதிமணி காட்டம்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020
hjk

 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "கமல்நாத் எனது கட்சியைச் சேர்ந்தவர், ஆனால் தனிப்பட்ட முறையில், அவர் பயன்படுத்திய மொழி எனக்கு பிடிக்கவில்லை. அவர் யாராக இருந்தாலும், அவரது செயலை நான் ஆதரிக்கமாட்டேன். இது துரதிர்ஷ்டவசமானது" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், "அரசியலில் ஈடுபடும் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கமல்நாத்தின் மோசமான பேச்சை பொதுவெளியில் நிராகரித்திருக்கிறார் ராகுல்காந்தி. பிஜேபியின் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை காப்பாற்றும் மோடி, யோகிகள் மத்தியில் பெண்கள் கண்ணியம் காக்கும் தலைவர்" என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்