rajini

Advertisment

மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் வேறுபாட்டு வழியில் சென்றாலும் போய்ச்சேரும் இடமும் நோக்கமும் ஒன்றுதான் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நெல்லை மாவட்ட ரசிகர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் ரசிகர்களிடம் பேசியதாவது,

அரசியல் கட்சித் தொடங்குவதற்கு கட்டமைப்பு மிக மிக முக்கியம். அதனை சரியாக செய்ய வேண்டும். மிகப்பெரிய கட்சிகள் அதனால்தான் வெற்றிப்பெற்றன. ரஜினி மக்கள் இயக்கம் 32 ஆண்டுகளாக கவனத்துடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது, இதனை மேலும் பலப்படுத்துவதே நோக்கம்.

Advertisment

எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர தேவையில்லை, அவர்கள்தான் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள். ஒரு குடும்பம் நடத்த வேண்டுமென்றால், கூட குடும்ப தலைவன் சரியாக இருக்க வேண்டும். நான் சரியாக இருக்கிறேன். அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது முக்கியம். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம் என்று கூறினார்.

இந்த சந்திப்பிற்கு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அனைத்து ரசிகர்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். நேரம் வரும்போது நேரடியாக சுற்றுப் பயணம் மூலம் ரசிகர்களை சந்திப்பேன். காவிரி நீர் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கது.

கமலுக்கு வாழ்த்துகள். அவரின் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. அவரது கூட்டத்தை முழுவதுமாக பார்த்தேன். இதற்கு பின்னர் மீண்டும் அவருக்கு நான் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். கமல் ஒரு திறமைசாலி அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு தெரிகிறது. மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் வேறுபாட்டு வழியில் சென்றாலும் போய்ச்சேரும் இடமும் நோக்கமும் ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.