style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கமலஹாசனுக்கு புத்தி சரியில்லை என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
மதுரையில் நிவாரண பொருட்களை கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுநிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
கமல் ஒரு தத்துக்குட்டி என்பதை ஒவ்வொரு நடைமுறையிலும், பேட்டியிலும் காட்டிக்கொண்டிருக்கிறார். அவரை நாடி சென்றஇளைஞர்கள் எல்லாம் பாதை மாறிவிட்டோம் என்று விலகி வந்துவிட்டனர். இன்று மக்கள் மய்யம் என்று நடத்திக்கொண்டு அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது. இந்த அரசை துருப்பிடித்த அரசு என கூறியிருக்கிறார். இது துருபிடித்த அரசு அல்ல கூர்மையான அரசு, மக்களுக்கு பணியாற்றுகின்ற சேவக அரசு.
இன்று கிட்டத்தட்ட ஆறுலட்சம் தார்பாய்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ள அரசை கமலஹாசன் குற்றம் சொல்கிறார் என்றால் அவருக்கு மூளையில்தான் ஏதோகோளாறு, அவருக்கு புத்தி சரியில்லை போல.இன்னும் அவர் கூட அறிவாளிகள், தன்னார்வலர்கள் உள்ளனர் அவர்களும் அவரை விட்டு விரைவில் விலகிவிடுவார்கள்.
ஏற்கனவே இவரது குடும்ப வாழ்க்கை எப்படிப்பட்டது, இவரது பின்னணி என்ன என்று அனைவருக்கும் தெரியும். இவரால் எந்தனை நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்ட்டுள்ளனர் என்று நாட்டு மக்களுக்கு தெரியும் என்றார்.