Advertisment

குரங்கணி காட்டுத் தீ: உயிரிழந்த அனுவித்யா, நிஷா குடும்பத்தினரைச் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்

Kamal  Hassan

Advertisment

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த நிஷா உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ராஜகீழ்ப்பாக்கத்துக்குச் சென்ற கமல்ஹாசன் அனுவித்யாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Kamal  Hassan Kamal  Hassan

Advertisment

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஒருவாரமாக காட்டுத் தீ எரிந்துகொண்டிருக்கும் நிலையில் முன்கூட்டியே எச்சரித்துத் தடுத்திருக்கலாம் என்றும் இந்த விபத்தை பாடமாகக் கொண்டு எதிர்காலத்தில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார். இதேபோல் சென்னை மடிப்பாக்கத்தச் சேர்ந்த நிஷாவின் குடும்பத்தினரைச் சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்.

Kamal Hassan
இதையும் படியுங்கள்
Subscribe