Skip to main content

மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது நல்ல மாற்றம்; கமல்ஹாசன்

Published on 01/04/2018 | Edited on 01/04/2018
 Kamal Hassan


 

காவிரி விவகாரத்திற்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது நல்ல மாற்றம் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கூறியுள்ளார்.
 

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. 
 

இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 

இந்த நிலையில், ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கூறியுள்ளார்.
 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது. காவிரி விவகாரத்திற்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது நல்ல மாற்றம். காவிரி விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பது போல் அரசியலிலும் மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
 

காவிரி விவகாரத்திற்காக தேவைப்பட்டால் மக்கள் நீதி மய்யம் போராட்டம் நடத்த தயாராக உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து ஏப்ரல் 4-ல் திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி.மு.க. கூட்டணியில் இணைந்தது ஏன்?’ - கமல்ஹாசன் விளக்கம்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Why joined to the DMK alliance KamalHaasan explained

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரியின் 1 ஒரு மக்களவை தொகுதி உட்பட 10  தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. அதே சமயம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு நிமிடம் 11 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கூட்டணி நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு கை கூடி விடக்கூடாது என்பதற்கான முடிவு இது. இந்த அரசியலை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்திருக்கிறது சரித்திரம். எந்த கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்த நேரத்தில் அனைவருமே என்னுடைய சகோதரர்கள் தான். தேசத்திற்காக நாமெல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் என்னுடைய அரசியல்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

"நாங்கள் தான் முதலில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்தோம்" - கமல்ஹாசன் 

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

actor kamal haasan tweets about tamil nadu budget

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (20.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து துறை வாரியான அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000  ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியானது செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது  கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில்  குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், "இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்திய கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழி காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.