cbm

Advertisment

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகம் எழுந்துள்ளது. இந்நிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மர்ம நபர்கள் மற்றும் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதாக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெற தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமானகமல்ஹாசன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார்.