Advertisment

கமல்ஹாசன் இன்று குமரியில் சுற்றுப்பயணம்!

Advertisment

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக இன்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று இரவு கன்னியாகுமாரிக்கு வந்த அவர் ஹோட்டல் ஸ்பார்சாவில் தங்கினார்.

இன்று காலை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து காந்தி மண்டபத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் மக்களை பார்த்து உங்கள் அன்பிற்கு நன்றி என கூறி சென்றார்.

தொடர்ந்து ரயில் நிலையம் சந்திப்பில் கூடியிருந்த மக்களிடம் பேசிய அவர், 42 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமாரிக்கு சின்ன பையனாக வந்திருந்தேன். பேருந்தில் தான் வந்து இறங்கினேன் விமானத்தில் வரவில்லை. அப்போது இங்குள்ள தெருக்களில் எல்லாம் என் கால் பாதம் பட்டிருந்தது.

Advertisment

இப்போது நான் வந்திருப்பது மக்களை கண்டு சந்தித்து பேச வந்திருக்கிறேன். இதை ஒரு கல்வி யாத்திரையாக கருதுகிறேன் என்றார்.

kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe