தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிகப்படியான தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வரும் 7ம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை அவரை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.