"எங்கள் முதல்வர் எங்கள் பெருமை, 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்" என்ற தலைப்பில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றம் பின்புறத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்70வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த கமல்ஹாசன் (படங்கள்)
Advertisment