தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த போராட்டத்தில் பல அமைப்புகள் கலந்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Advertisment

 Kamal Haasan has no right to talk about the country's problems!

பின்னர் பேசிய ராஜேஸ்வரிபிரியா, 60ஆண்டு காலமாக கலைத்துறையில் இருக்கும் கமலஹாசன் இத்தகைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவசியம் என்ன. தொடர்ந்து இரண்டு வருடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து நான் போராடி வருகிறேன். மூத்த நடிகராகவும், நாளை தமிழகத்திற்கு முதலமைச்சராக வர நினைக்கும் கமல்ஹாசன் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சமுதாயத்தை சீர்குலைக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தாரும் சேர்ந்து எதிர்த்து போராட வேண்டும். இன்று நடந்து கொண்டிருக்கும் ஆணவ படுகொலைகள் பற்றி கமலஹாசன் அவர்களால் பேசமுடியுமா? காதலுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிடையாது. ஆனால் அந்த காதலையே கொச்சைப்படுத்தி அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

Advertisment

 Kamal Haasan has no right to talk about the country's problems!

இதற்கு மேல், நாட்டின் பிரச்சனையை பற்றி பேச கமலஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. அதற்கு மேல் அவர் பேசினால் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்போம். ஆபாசனமான உடைகளை அணிந்து நடிப்பதால் இளைஞர்கள் மனது பெருமளவில் பாதிப்பு அடைகிறது. சின்னத்திரையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் போர்டு கட்டாயம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பிறகு பேசிய இந்து மக்கள் கட்சி மா.நி.பொதுச்செயலாளர் பாரத் மாதா செந்தில், நாளைய முதல்வர் பதவிக்கு கனவுகாணும் இவர் பெண்கள் நிலையினை மோசமாக சித்தரிப்பது மோசமானது என்று கூறினார்.