கஜா புயல் நிவாரணப் பணிகளை 3 மணி நேர படம் போல் முடித்துவிட முடியுமா? என்று நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
புயல் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இதுதொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், கஜா புயல் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரைப்படம் 3 மணி நேரம். அதில் உடனே எல்லாம் நடக்கும். தொடக்கம் வரும், இடைவேளை வரும், கிளைமேக்ஸ் வரும். இது ரியாலிட்டி. இதை அவர்கள் அப்படி பார்க்க முடியாது. நிவாரணப் பணிகளை 3 மணி நேர படம் போல் முடித்துவிட முடியுமா? என்றார்.