தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், நடிகர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை பொறுத்தவரை ஆரம்பத்தில் அவரது பேச்சுதான் புரியாமல் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அவரது நடவடிக்கைகளும் புரியாமல் உள்ளது. எங்கு செல்கிறார். எதை நோக்கி செல்கிறார். அரசியலில் எதை சாதிக்க விரும்புகிறார் என்பது எதுவும் புலப்படவில்லை. அவர் ஒரு சக்தியாக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி நிற்கிறது. அவருக்கென ஒரு வாக்கு வங்கி தமிழகத்தில் உருவாகவில்லை. அங்கே 100 இங்கே ஆயிரம் என்று சில இடங்களில் பெறலாமே தவிர பெரிய அளவில் வாக்கு வங்கி அவருக்கு எங்கும் உருவாகவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/evks elangovan 777.jpg)
அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்திருப்பதை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேச்சுவார்த்தை வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை எப்படி பயன்படுத்தி இந்த பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுக்கு சாதகமான காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)