Advertisment

 “நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுகிறேன்” - கமல்ஹாசன்

Kamal Haasan is contesting the parliamentary elections in Coimbatore

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை வந்தடைந்தார். அங்குகோவை மண்டல அளவிலான தனது கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment

நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், “எனக்கு பல்வேறு பகுதியிலிருந்து அழைப்புகள் வருகிறது. அதிலும் எனக்குக் கோவையில் பெரும் ஆதரவு இருக்கிறது. விக்ரம் படத்திற்குக் கூட்டம் கூடும் போது மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் கூடாதா? வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சியினர் தயாராகுங்கள்” எனப் பேசியுள்ளார்.

Advertisment

கடந்த சட்ட மன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு நடிகர் கமல்ஹாசன் தோல்வியடைந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Coimbatore kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe