Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை தி.நகரில் உள்ள ஓட்டலில் நடந்தது.

இதில் கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, நடிகர் நாசர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், அர்ஜுன் சம்பத், வசீகரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அவர்கள் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு பற்றியும், விவசாயிகளுக்கான செயல் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். தேர்தலில் இவர்களெல்லாம் கூட்டணி வைக்காமல் போனாலும் பரவாயில்லை. காவிரிக்காக இவர்கள் கூட்டணி வைத்தது மகிழ்ச்சியை தருவதாக ஆலோசனையில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர்.

படங்கள்: அசோக்குமார்