Advertisment

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்- காணொளி மூலம் பங்கேற்று உரையாற்றவுள்ள கமல்ஹாசன்!

Kamal Haasan to address National Panchayat Raj Day through video

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று தமிழகமெங்கும் சிறப்பு கிராமச் சபைக் கூட்டம் நடத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரங்களைப் பரவலாக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் குறித்தும், கிராம சபைகள் குறித்தும் பரவலான விழிப்புணர்வைக் கொண்டு வந்து, கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்தியதில் மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் அளப்பரிய பங்களிப்பு தமிழகம் அறிந்ததே.

Advertisment

மாதிரி கிராமச் சபைக் கூட்டங்கள் நடத்தி, கிராம சபைக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று, கிராமச் சபைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கமல்ஹாசன், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்களை கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழி எடுக்கச் செய்து இணையதளம் மூலம் உரையாற்றவுள்ளார்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

kamalhaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe