
தமிழகத்தில் நாளை தீபாவளி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக கடந்த ஒருவாரமாகவே மக்கள் புத்தாடை, பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் மக்கள் கூடும் இடங்களை காவல்துறையினர் கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தீபாவளி நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
" பாறைகளின் அழுத்தத்தையும் மீறி அழகாய் ஒரு மலர் பூப்பது போல் விழுந்து கிடக்கும் வாழ்க்கையிலே விசேஷ நாளும் வருகிறது. எழுந்து நடக்கும் நம்பிக்கை இருக்கும் வரைக்கும் துயரில்லை. ஒளிர்ந்து மகிழ்த்தும் திருநாளில் உள்ளம் கனிந்து வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.