ADVERTISEMENT

'விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது' - மு.க.ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

09:34 AM Mar 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. இந்தத் தேர்தல் சூழ்நிலையில், தனது 68வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், 'விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்தநாளில் வியந்து வாழ்த்துகிறேன்' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT