Advertisment

கமலை துரத்தும் மர்மயோகி!

ka

Advertisment

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரிய மனுவிற்கு நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் வரும் திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பப்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6.90 கோடி ரூபாயும், படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

ஆனால் நடிகர் கமல் மர்மயோகி படத்தை தயாரிக்காமல் "உன்னைபோல் ஒருவன்" படத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த 6.90 கோடி ரூபாய் கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை தயாரிக்க பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் 4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடியை கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குனர் கே.எஸ்.சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில் தங்கள் நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பி அளிக்கமால் விஸ்பரூபம் 2 படத்தை வெளியிட நடிகர் கமல், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர்க்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது மனு தொடர்பாக வரும் திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்க நடிகர் கமலஹாசன், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

oscar film marmayogi kamalhasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe