காங்கிரசுடன் கமல் கூட்டணி குறித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது: திருநாவுக்கரசர்

Su. Thirunavukkarasar

காங்கிரஸ் கட்சியுடன் கமல் கூட்டணி குறித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடருகிறது. அதில் எந்த பிரச்சனையும் கிடையாது. காங்கிரஸ் கட்சியுடன் கமல் கூட்டணி குறித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர் போடும் நிபந்தனைகள், திமுகவை விட்டு வெளியே வந்தால்தான் கூட்டணி என்பது அவருடைய விருப்பம். அவருடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். எங்களுடைய காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Alliance congress kamalhaasan
இதையும் படியுங்கள்
Subscribe