/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfthtrhr.jpg)
நாளை வெளிவரவுள்ள ஸ்டெர்லைட் வழக்குத் தீர்ப்பில் நீதியை நம்புகிறோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைமூடப்பட்ட நிலையில், அதனை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விரைந்து முடிக்கும் வகையில் கடந்த நான்கு வாரங்களாக தினமும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாளை சென்னை உயர்நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வழங்க உள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ள கமல்ஹாசன், "நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம்.நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பலகோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக..." எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)