பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த சம்பவம் குறித்துபல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அந்தப் பொண்ணு அலறும்குரல் கேட்டதிலிருந்து மனசு பதறுது. என்ன ஒரு 18, 19 வயசு இருக்குமா. அந்த பெண்ணுடைய குரலில் இருந்த ஒரு அதிர்ச்சி, பயம் நண்பன் என்று கூட்டிவந்தவன்தன்னை காப்பாற்றி கூட்டிட்டு போயிறமாட்டானா என்கிற தவிப்பு கண்ண மூடும்ஒவ்வொரு நொடியும் திரும்பத் திரும்ப காதில் கேட்கிறது.

Advertisment

நிர்பயாவுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து ஊர் உலகமே ஒன்று திரண்டபோதுஅன்றையதமிழக முதல்வர் ஒரு அறிக்கை விடுறாங்க, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடூர குற்றங்களாககருதப்பட்டு உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்என்று. அந்தப் பெண்மணியின் பெயரை வைத்துஆட்சி செய்கின்ற இந்த அரசாங்கம் எப்படி இவ்வளவு கவனக்குறைவாக, மெத்தனமாக இருக்க முடிகிறது.

Advertisment

KAMAL

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பெண்ணை பெற்ற எல்லோருக்கும் பதறுதுஉங்களுக்கு பதறலயா.குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்வதில் இருக்கும் மும்பரம்குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யும் என பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதில் இல்லையே ஏன்?

வழக்கை விசாரிக்கும்எஸ்பி பத்திரிக்கையாளர் சந்திப்பில்புகார் கொடுத்த பெண்ணின் பெயரை தவறுதலாக சொல்லிட்டாராம். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலுக்கு எதிராக அவர் செயல்பட்டாலும் அரசாங்கம் அமைதியாகவே இருக்கிறது ஏன்?. அடுத்த இரண்டு நாளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ வெளியே வருகிறது எப்படி? குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுவிட்டதாகசொல்லும்போது இந்த வீடியோ எப்படி வெளியே வந்தது. அந்த பாதிக்கப்பட்ட வீடியோ. அது எப்படி வெளியே வந்துவிட்டதுஎன்ன காரணம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறேன் என்று சொன்ன தலைமையே போட்டோவை சட்டை பாக்கெட்டில்வைத்து இருக்கு நீங்க பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த அநியாயத்திற்கு ஆக என்ன பண்ணி இருக்கீங்க.

நான் சொல்லட்டுமா தன்னுடைய எதிர்ப்பை பதிவு பண்ண வந்த மாணவர்களை பலவந்தமாக அப்புறபடுத்தியுள்ளீர்கள்.பெண்களை பயமுறுத்த முயற்சி பண்ணி இருக்கீங்க. நேர்மையான வழியில் நியாயமான கோபத்தை பதிவு பண்ண வந்த பெண்களை முறைதவறி நடந்து கொண்டஇந்த காவல்துறையாஎங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறது என்று எங்கள் பெண்கள் கேட்பது உங்களுக்கு கேட்கலையா மிஸ்டர் சிஎம்

போராட்டம் நடத்த வரும் பெண்களை போலீசை விட்டு அடிக்கிறீர்கள். ஆனால் உங்களின் ஆட்சி ஒரு பெண்ணின் பெயரால் நடக்கும் ஆட்சி என்று நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாதுக்கும் ஒரு எல்லை இருக்கு. மக்கள் நீதி மையத்தின் தலைவராக கேட்கவில்லை இரு பெண்களுடைய அப்பாவாக கேட்கிறேன்.இந்த பாவத்திற்கு என்னபரிகாரம் பண்ண போறீங்க. எங்கள் பெண்களும் புகார் கொடுக்க கூடாது என்று வீடியோ வெளியேற்றுகிற சகோதரிகளுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்.

கட்சி பாகுபாடுகள் எல்லாத்தையும் தாண்டி இந்த கொடூரமான காரியத்தை செஞ்சவங்க மேலே இந்த அரசாங்கம் எடுக்க போகின்ற நடவடிக்கை என்ன?.நீங்க கொடுக்கிற தண்டனை பெண்களுக்கு எதிராக கொடுமையை எவனாவது செய்தால் அரசாங்கம் விடாது என்கின்ற நம்பிக்கையை தரவேண்டும்.

இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள். நம்ம நாட்டுலஇருபெரும்காவியங்களாக கருதப்படும் மகாபாரதமும், இராமாயணமும் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்கானபோர்களை பற்றியது. தன் மனைவிக்கு ஏற்பட்ட துயரை துடைக்கபுறப்படுகின்ற கடவுளர்கள் வாழ்ந்த நாட்டில் உங்கஅம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படிதுடைக்கபோகிறீர்கள் சாமி.