Advertisment

குக்கர், கொலுசு லிஸ்டில் காமாட்சி விளக்கு; பிரச்சாரத்திற்கு நாளை மட்டுமே கடைசி நாள்

 Kamakshi Lamp on Cooker Lock List; Only Tomorrow is Last Day for Promotion

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து ஈரோட்டில் சில அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது எனப் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.

Advertisment

அண்மையில் காங்கிரஸ் சார்பில் குக்கர் பரிசுப் பொருளாக வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கைக் கடிகாரம், வெள்ளிக் கொலுசு ஆகியவை விநியோகிக்கப்பட்டது. குறிப்பாக வீரப்பன் சத்திரம் பகுதிக்குட்பட்ட வீடுகளில் ஒரே மாதிரியான ஸ்மார்ட் வாட்ச்கள், வெள்ளிக் கொலுசுகள் இன்று காலை முதல் கொடுக்கப்பட்டது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தது.

Advertisment

இந்நிலையில் வேட்டி, சேலை, குக்கர், கொலுசு, ஸ்மார்ட் வாட்ச் லிஸ்டில் கூடுதலாக காமாட்சி விளக்கும் சேர்க்கப்பட்டுள்ளது. அதே வீரப்பன் சத்திரம் பகுதியில் வெள்ளி காமாட்சி விளக்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. நாளைபிரச்சாரம் செய்யக் கடைசி நாள்என்ற நிலையில் இன்னும் ஏராளமான பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

admk byelection congress Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe